கிறிஸ்துவையே பின்பற்றுவோம்; பிசாசின் தந்திரங்களுக்கு எதிர்த்து நிற்போம்! "நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்." — யோவான் 14:6 இன்றைய உலகில் மக்கள் பிரபலங்களை, அரசியல் தலைவர்களை, மதத் தலைவர்களை, சமூக ஊடக பிரபலங்களை, அவ்வளவு ஏன் சில நேரங்களில் தேவ ஊழியர்களைக் கூட கண்மூடித்தனமாகப் பின்பற்றுகிறார்கள். ஆனால் வேதாகமம் நமக்கு ஒரு முக்கியமான உண்மையைக் கற்றுக்கொடுக்கிறது: மனிதர்கள் அனைவரும் குறையுள்ளவர்கள்; கிறிஸ்து மட்டுமே பரிபூரணமானவர். மனிதர்களை மதிக்கலாம், அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளலாம். ஆனால் நமது விசுவாசத்தின் அடித்தளமாக எந்த மனிதனையும் வைக்கக் கூடாது. 1. மனிதர்கள் தோல்வியடையக்கூடியவர்கள் வேதாகமத்தில் தேவனால் பயன்படுத்தப்பட்ட மகத்தான மனிதர்கள்கூட தவறுகள் செய்தார்கள். தாவீது — தேவனுடைய இருதயத்திற்கு ஏற்ற மனிதன் என்று அழைக்கப்பட்டாலும், பெரிய பாவத்திலும் விழுந்தார். பேதுரு — இயேசுவின் நெருங்கிய சீடராக இருந்தும், இயேசுவை மூன்று முறை மறுத்தார். ஒரு விசுவாசி, தலைவர் அல்லது ஆன்மீக முன்மாதிரி தவறும்போது நமது விசுவாசம் குலை...
Posts
- Get link
- X
- Other Apps
ஒளியிலே நடங்கள் எபேசியர் 5: 8. முற்காலத்தில் நீங்கள் அந்தகாரமாயிருந்தீர்கள் , இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள் ; வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள் . 9. ஆவியின் கனி , சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும் . 10. கர்த்தருக்குப் பிரியமானது இன்னதென்று நீங்கள் சோதித்துப்பாருங்கள் . 11. கனியற்ற அந்தகாரக் கிரியைகளுக்கு உடன்படாமல் , அவைகளைக் கடிந்துகொள்ளுங்கள் . 12. அவர்களால் ஒளிப்பிடத்தில் செய்யப்படும் கிரியைகளைச் சொல்லுகிறதும் அவலட்சணமாயிருக்கிறதே . 13. அவைகளெல்லாம் கடிந்துகொள்ளப்பட்டு வெளிச்சத்தினால் வெளியரங்கமாகும் ; வெளியரங்கமாக்குகிறதெல்லாம் வெளிச்சமாயிருக்கிறது . 14. ஆதலால் , தூங்குகிற நீ விழித்து , மரித்தோரை விட்டு எழுந்திரு , அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பிப்பாரென்று சொல்லியிருக்கிறார் . இருளைத் தகர்த்த வெளிச்சம் தோற்றம் : “ வெளிச்சம் உண்டாகக்கடவது ”. வேதாகமத்த...